திருப்பதி லட்டு விவகாரத்தில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மீது உச்ச நீதிமன்றம் கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளது. திருப்பதி கோவிலின் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவின் தயாரிப்புக்காக பயன்படுத்தப்படும் நெய்யில் மாட்டுக்கொழுப்பு கலந்துள்ளதாக நாயுடு பொது வெளியில் கருத்து வெளியிட்டது சரியில்லை என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

நீதிமன்றத்தில், மாட்டுக்கொழுப்பு கலந்த நெய்யை லட்டுவில் பயன்படுத்தியதாக குற்றம் சாட்டுவதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று தெரிவித்த நீதிபதிகள், இவ்வகையான தகவல்களை உறுதி செய்யாமல் பொது வெளியில் பேசுவதால் பொதுமக்களின் மத உணர்வுகள் பாதிக்கப்படும் என்று கூறினர்.

சந்திரபாபு நாயுடு மத உணர்வுகளை மதிக்கவேண்டும் என்றும், அத்தகைய கருத்துகள் எந்தவித ஆதாரமின்றி பேசப்படுவது தவறானது என்றும் நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.