திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தினம் தோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வரும் நிலையில் பக்தர்களின் பாதுகாப்புக்காக தேவஸ்தானம் தற்போது புதிய நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. அதன்படி அலிபிரி மறைப்பாதையில் ஏழாவது மைதிலிருந்து நரசிம்ம சுவாமி கோவில் வரை உயரிய எச்சரிக்கை மண்டலமாக ஆந்திர வனத்துறை அறிவித்தது. அந்த பகுதியில் 3 இருக்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.

அதேசமயம் மலைப்பகுதிகளில் பகல் 2 மணிக்கு மேல் குழந்தைகளுடன் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. நடைபாதைகளில் உணவுப் பொருட்கள் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் மலைப்பாதைகளில் செல்லும் பக்தர்கள் கையில் தடி வைத்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் சிறுமி சிறுத்தை தாக்கி உயிரிழந்த பிறகு வனத்துறையும் தேவஸ்தானமும் நடைபாதை வழிகளில் குறிப்பாக அலிபிரி நடைபாதையில் பெரிய அளவில் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக தேவஸ்தானம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.