நாடு முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. அதே சமயம் ரேஷன் கடைகள் மூலம் மத்திய மற்றும் மாநில அரசுகள் மக்களுக்கு பல பலன்களை வழங்கி வருகின்றன. தற்போது பிரதம மந்திரி கரீப் கல்யாண் அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் 5 கிலோ கூடுதல் ரேஷன் வழங்குவதற்கு அரசு ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன் கூடுதல் ரேஷன் சலுகை டிசம்பர் மாதம் வரை நீட்டிக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 15 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் பெரிதும் பயனடைவார்கள். இந்த திட்டம் மூலமாக கடந்த ஆண்டு சுமார் 150 மெட்ரிக் டன் ரேஷன் அரசுக்கு இலவசமாக விநியோகம் செய்யப்பட்டதாக அரசு தெரிவித்துள்ளது. தற்போது டிசம்பர் மாதம் வரை ரேஷன் சலுகை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் ரேஷன் அட்டைதாரர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.