இந்தியாவில் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா என்ற திட்டத்தின் மூலமாக மத்திய அரசு சார்பில் ஏழை எளிய மக்கள் அனைவருக்கும் இலவச சிலிண்டர் இணைப்பு வழங்கப்படுகிறது. இந்த திட்டம் இன்னும் மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ள நிலையில் அதற்கு சுமார் 75 லட்சம் இணைப்புகள் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த திட்டத்தில் பெண்களுக்கு இலவசமாக சிலிண்டர் இணைப்பு மற்றும் மானிய பணம் வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த அறிவிப்பின்படி அடுத்த மூன்று ஆண்டுகளில் 75 லட்சம் எல்பிஜி இணைப்புகள் வழங்கப்படும் எனவும் அதற்கு 1650 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு அறிவித்துள்ளது.மேலும் இந்த திட்டத்தில் பயன்பெற பெண்கள் விண்ணப்பிக்கலாம் என அரசு தெரிவித்துள்ளது.