டெல்லியில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக  ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தியேட்டரில் விற்கப்படும் உணவுப் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்க முடிவெடுக்கப்பட்டது. இதனை தொடர்ந்து PVR சினிமாஸ் உணவுப் பொருட்களுக்கு ஆஃபர் அறிவித்தது. சமீபத்தில் வாடிக்கையாளர் ஒருவர் உணவு விலை அதிகமாக இருப்பதாக ட்விட்டரில் புகார் எழுப்பி இருந்தார்.

இந்த நிலையில் 99 ரூபாய்க்கு பாப்கான் பெப்சி காம்போ அறிமுகம் செய்து PVR சினிமாஸ் தனது ட்வீட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது. தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட வடமாநிலங்களில் இந்த ஆஃபர் பயன்படுத்தலாம். மேலும் தமிழகத்திலும் விரைவில் இந்த ஆஃபர் கொண்டுவரப்படும் என்று கூறப்படுகிறது.