பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக கன்னியாகுமரி வந்துள்ளார். அங்கு பகவதி அம்மன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார். அதன் பிறகு அதன் பிறகு விவேகானந்தர் பாறைக்கு சென்று அவர் அங்கு தியானத்தில் ஈடுபட்டுள்ளார். நாளை மாலை வரை விவேகானந்தர் பாறையில் பிரதமர் மோடி தியானத்தில் ஈடுபட இருக்கிறார். இந்த நிலையில் தியானத்திற்கு இடையில் பிரதமர் மோடியின் எக்ஸ் பதிவு வெளியாகி உள்ளது.

அதில் அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம் , திரிபுரா மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் புயல் காரணமாக கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. எனது எண்ணமும் பிரார்த்தனையும் அங்கு பாதிக்கப்பட்டவர்களோடுதான் உள்ளது. அங்குள்ள கால சூழல் குறித்து கேட்டறிந்தேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ அதிகாரிகள் காலத்தில் இறங்கி பணியாற்றி வருகிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார் .

மேலும் மற்றொரு பதிவில் நம் நாட்டின் கடின உழைப்பாளிகளுக்கு நன்றி. 2023 -24 காலகட்டத்தில் நாட்டின் 8.2% வளர்ச்சி உலக அளவில் இந்தியா வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரம் ஆக இருப்பது வெளிப்படுத்துகிறது . எதிர்காலத்தில் நடக்க போகும் சம்பவங்களுக்கான முன்னோட்டம் தான் என்று குறிப்பிட்டுள்ளார்.