தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரும் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நம்பிக்கை தெரிவித்துள்ளார். கோவை பீளமேடு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, இந்தியாவில் ஒவ்வொரு மாநிலமாக பாஜக ஆட்சியைப் பிடித்துக் கொண்டிருக்கிறது. பாஜகவின் வளர்ச்சி தமிழக மக்கள் மனதில் நிலை கொள்ள ஆரம்பித்து விட்டது. வேகமாக வளர்வதால் நம் மீது கல்லை வீசுகிறார்கள்.

நடுத்தர மக்களுக்காக பிரதமர் மோடி யோசித்து மருந்தகத்தை ஆரம்பித்தால் அதனை தமிழக அரசு அனுமதிக்க மறுக்கிறது. ஆனால் அதையே இப்போது காப்பியடித்து முதல்வர் மருந்தகம் என்ற பெயரில் முதல்வர் ஸ்டாலின் ஆரம்பித்துள்ளார். 2026 இல் திமுக வேரோடு பிடுங்கப்பட்டு தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரும். புதிய தலைவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவது நம்முடைய கடமை. சிவபெருமான் போல விஷத்தை உண்டு வெற்றியை நோக்கி நாம் செல்ல வேண்டுமென்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.