திமுக கட்சியின் முன்னாள் சுற்றுலாத்துறை அமைச்சராக இருந்தவர் சுரேஷ் ராஜன். இவர் திருநெல்வேலி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலங்குளம் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் பொறுப்பாளராக இருக்கிறார். இவர் பழைய குற்றாலம் பகுதியில் உள்ள ஒரு விடுதி அறையில் தங்கி இருந்தார். இந்நிலையில் சம்பவ நாளில் அவர் தங்கி இருந்த விடுதி அறையில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதைத்தொடர் அவர்கள் சுரேஷ் ராஜனை அறைக்கு வருமாறு அழைத்தனர்.

அவரை அறையை திறக்குமாறு கூறிவிட்டு சோதனையை தொடங்கினர். அந்த சோதனையின் போது உரிய ஆவணங்கள் இன்றி வைக்கப்பட்டிருந்த ரூ‌.11 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.  இந்த சம்பவம் வேகமாக அப்பகுதியில் பரவிய நிலையில் விடுதிக்கு முன்பாக திமுக தொண்டர்கள் திரண்டனர். ஆனால் விடுதிக்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. மேலும் இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவியது.