திமுக, பாஜக, நாதக உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் நேற்று(ஏப்ரல் 6) பிரபல தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். நிகழ்ச்சிக்கு இடையில் திமுக, பாஜக ஆகிய இரு தரப்பினரிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

ஒரு கட்டத்தில் இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது . இதில், ஒருவரை ஒருவர் நாற்காலிகளை தூக்கி வீசி கடுமையாக தாக்கிக்கொண்டனர். இதுதொடாபான வீடியோ வெளியாகி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.