2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக தோல்வியடைந்தால், அந்தக் கட்சியில் மிகப்பெரிய பிளவு ஏற்படும் என்றும், கனிமொழி தனிக்கட்சி தொடங்குவார் என்றும் அண்ணாமலை அதிரடியாகத் தெரிவித்துள்ளார். “ஒருபுறம் ஸ்டாலினும், மறுபுறம் கனிமொழியும் அரசியல் களத்தில் நேருக்கு நேர் மோதினால், திமுக தொண்டர்கள் யாரிடம் செல்வது என்று தெரியாமல் நிலைகுலைந்து போவார்கள்” என்று அவர் சுட்டிக்காட்டினார். மாநில அரசியலில் தடம் பதிக்க வேண்டும் என்ற நோக்கில் கனிமொழி சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட சீட் கேட்டதாகவும், ஆனால் உதயநிதியின் அரசியல் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு ஸ்டாலின் அதற்கு மறுப்புத் தெரிவித்துவிட்டதாகவும் அண்ணாமலை குற்றம் சாட்டினார்.

​தமிழகத்தின் தற்போதைய மக்கள் எழுச்சியைக் கவனித்தால், திமுக கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என ஸ்டாலின் கூறி வருவதை அண்ணாமலை கடுமையாகச் சாடினார். திராவிடக் கட்சிகள் இப்படி டெல்லிக்கு குத்தகைக்குப் போய்விட்டதைக் கண்டு வெட்கப்படுவதாகவும், வேதனைப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார். திமுகவில் நிலவும் வாரிசு அரசியலால் கனிமொழி ஓரங்கட்டப்படுவதாகவும், இதுவே எதிர்காலத்தில் கட்சி பிளவுபடுவதற்கு அஸ்திவாரமாக அமையும் என்றும் அண்ணாமலை தனது பேச்சில் ஆவேசமாகத் தெரிவித்தார்.