தமிழக வெற்றிக் கழகத்தின் முதலமைச்சர் விஜய் தலைமையிலான ஆட்சிக்கு, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) தனது முழு ஆதரவை வழங்கியுள்ளதாக அக்கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் தெரிவித்துள்ளார். “இந்த ஆட்சி அமைவதற்கும், தொடர்ந்து நீடிப்பதற்கும் நாங்கள் ஆதரவு அளித்திருக்கிறோம்; இதற்காக 3 ஆண்டுகள் அல்லது 5 ஆண்டுகள் என எந்தவித நிபந்தனைகளையும் நாங்கள் விதிக்கவில்லை” என்று அவர் அதிரடியாகக் கூறியுள்ளார். விஜய்யின் இந்த ஆட்சி மக்களுக்கு நல்லாட்சியாக அமையும் எனத் தாங்கள் நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

​குறிப்பாக, முந்தைய ஆட்சியின் மக்கள் நலத்திட்டங்கள் எதுவும் முடக்கப்படாமல் தொடர்ந்து செயல்படுத்தப்படும் எனத் தாங்கள் நம்புவதாகவும், அதையே முதலமைச்சர் விஜய்யும் உறுதி அளித்துவிட்டுச் சென்றிருப்பதாகவும் காதர் மொய்தீன் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். பழைய திட்டங்களின் தொடர்ச்சி மற்றும் புதிய திட்டங்களின் வரவு என விஜய்யின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருக்கும் என அவர் வெளிப்படுத்திய இந்த ஆதரவு, தவெக அரசுக்குக் கூடுதல் பலத்தை அளித்துள்ளது. கூட்டணி கட்சிகளின் இந்த நம்பிக்கையை விஜய் எவ்வாறு காப்பாற்றப் போகிறார் என்பதே இப்போது அரசியல் வட்டாரத்தின் எதிர்பார்ப்பாக உள்ளது.