தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் அரசியல் திருப்பமாக, அதிமுக உத்தியோகபூர்வமாக இரண்டாகப் பிளவுபட்டுள்ளது.

சட்டமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி மற்றும் எஸ்.பி. வேலுமணி தலைமையில் இரு துருவங்களாகப் பிரிந்திருந்த அதிமுக எம்.எல்.ஏ-க்கள், இன்று தற்காலிக சபாநாயகரிடம் தனித்தனியாகக் கடிதம் வழங்கியதன் மூலம் பிளவை உறுதி செய்துள்ளனர். இதில் ஒரு அதிரடித் திருப்பமாக, எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகம் தலைமையிலான 24 எம்.எல்.ஏ-க்கள் கொண்ட அணி, முதலமைச்சர் விஜய்யின் தவெக ஆட்சியை ஆதரிக்கப் போவதாகப் பகிரங்கமாக அறிவித்துள்ளது.

செய்தியாளர் சந்திப்பில் பேசிய சி.வி. சண்முகம், “மக்கள் தீர்ப்பை மதித்து விஜய்யின் ஆட்சியை ஆதரிக்கிறோம்; எஸ்பி வேலுமணி எங்கள் சட்டமன்றக் குழு தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்” என அதிரடி காட்டினார்.

இந்த மோதலுக்குப் பின்னால் இருக்கும் ஒரு பகீர் தகவலையும் சி.வி. சண்முகம் போட்டு உடைத்துள்ளார். அதாவது, “திமுக ஆதரவோடு முதலமைச்சராக நீடிக்க எடப்பாடி பழனிசாமி போட்ட பிளான் எங்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது; திமுகவோடு இணைந்தால் அதிமுகவே அழிந்துவிடும் என்பதால் தான் இந்த முடிவை எடுத்தோம்” என அவர் காரசாரமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

தற்போது அதிமுகவில் இபிஎஸ் தரப்பில் 23 எம்.எல்.ஏ-க்களும், வேலுமணி தரப்பில் 24 எம்.எல்.ஏ-க்களும் பிரிந்து கி குழப்பம் நீடிக்கிறது. அதைத் தொடர்ந்து, சி.வி.சண்முகம் தலைமையில் தலைமை செயலகம் வந்த 24 எம்.எல்.ஏக்கள், சட்டமன்ற குழு தலைவராக எஸ்பி வேலுமணியும், கொறடாவாக சி விஜயபாஸ்கரையும் ஆதரித்து தற்காலிக சபாநாயகர் கருப்பையாவிடம் ஆதரவு கடிதங்களை வழங்கினர். இதன் மூலம் அதிமுக உடைந்ததாக அரசல் புரசலாக பரவிய தகவல் உறுதியானது