தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய்யின் அரசுக்கு பெரும்பான்மையை நிரூபிப்பதில் சவால் நீடித்து வரும் நிலையில், அதிமுக-வின் மூத்த தலைவர் சி.வி.சண்முகம் ஒரு முக்கிய கருத்தை வெளியிட்டுள்ளார். அவர் கூறுகையில், “திமுக-வை எதிர்ப்பதற்காகவே எங்களது கட்சி தொடங்கப்பட்டது. கடந்த 53 ஆண்டுகளாக திமுக-வுக்கு எதிராகவே எங்களது அரசியல் பயணம் இருந்துள்ளது. அந்த வரலாற்றின் அடிப்படையில், தேர்தலில் வெற்றி பெற்றுள்ள தமிழக வெற்றிக் கழகத்திற்கு (TVK) ஆதரவு அளிக்க முடிவு செய்துள்ளோம்,” எனத் தெரிவித்துள்ளார்.

​திமுக-வை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதே தங்களது முதன்மை நோக்கம் என்பதால், விஜய் தலைமையிலான அரசுக்கு ஆதரவு நீட்டிப்பது குறித்த ஆலோசனைகள் அதிமுக-வில் தீவிரமடைந்துள்ளன. இந்த ஆதரவு கிடைத்தால், சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் தனது பெரும்பான்மையை எளிதாக நிரூபிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.