
தமிழகத்தில் காங்கிரசுக்கு ஒதுக்கும் தொகுதிகளில் எத்தனை இடங்களில் டெபாசிட் பெறும் என தெரியவில்லை என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் வன்னியரசு கூறியுள்ளார். இப்பேச்சு கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி இடையே நேரடி மோதல் உருவாகியுள்ளதால் திமுக கூட்டணி உடையும் சூழல் நிலவுகிறது. இதனால் கூட்டணியில் இருந்து எந்த கட்சி வெளியேறும் என அதிமுக உன்னிப்பாக கவனிக்க தொடங்கியுள்ளது.