தியாகி இம்மானுவேல் சேகரனாரின் 6ஆவது நினைவுதினம் மற்றும் குருபூஜை இன்று அனுசரிக்கப்படும் நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில், பாஜக  தலைவர் அண்ணாமலை மரியாதை செய்துள்ளார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,  “திமுக ஆட்சிக்கு வந்தவுடன், முதலாண்டு சனாதன தர்மத்தை எதிர்ப்போம்.

இரண்டாவது ஆண்டு சனாதன தர்மத்தை வேரறுப்போம். மூன்றாவது ஆண்டு, சனாதன தர்மத்தை முழுவதுமாக வேரறுப்போம். நான்காவது ஆண்டு எங்கள் கட்சியில் 90% இந்துக்கள். ஐந்தாவது ஆண்டு வேலை  தூக்கிக்கொண்டு “வீரவேல் வெற்றிவேல்” என தெரிவித்துள்ளார்.