சமீபத்தில் ஆளூர் ஷாநவாஸ் அளித்த பேட்டி ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் அவர், “விஜய் மட்டுமல்ல, யார் வந்தாலும் திமுகவை அழிக்க முடியாது; 2026ல் கூட திமுகவை வெல்ல முடியாது” என உறுதியாக கூறியுள்ளார். இதன் காரணங்களை விரிவாக விளக்கிய அவர், “2017ல் திரு. எடப்பாடி பழனிசாமி ஆட்சியைப் பெற்றார். அப்போது 37 எம்.பி.க்கள் இருந்தனர். ஆனால் 2019ல் 1 எம்.பி. மட்டும் பெற்றார்; 2021ல் ஆட்சியையும் இழந்தார். அதேசமயம், 2018ல் திரு. ஸ்டாலினிடம் கட்சி பொறுப்பு வழங்கப்பட்டது. அப்போது திமுக ஆட்சியில் இல்லை, 0 எம்.பி.க்களே இருந்தனர்,”.

அவர் தொடர்ந்து, “2019ல் திமுக 39 எம்.பி.க்களையும், 2021ல் ஆட்சியையும், 2024ல் 40 எம்.பி.க்களையும் பெற்றுக் கொடுத்துள்ளார். இதற்குக் காரணம் — திமுக தனது கொள்கைகளை உறுதியாகப் பின்பற்றி வருகின்றது. அந்தக் கொள்கைகளில் சிறிதளவு சமரசம் செய்தாலும் திமுகவை காப்பாற்ற முடியாது. இதுவே திமுகவிற்கும் அதிமுகவிற்கும் உள்ள மிகப் பெரிய வித்தியாசம்,” எனக் கூறியுள்ளார். ஆளூர் ஷாநவாஸ் கூறிய இந்த கருத்துக்கள் தற்போது இணையத்தில் வைரலாகி, அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது.