ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது. இந்த தேர்தலில் தேமுதிக சார்பில் வேட்பாளராக ஆனந்த் நியமிக்கப்பட்டுள்ளார். இவருக்கு ஆதரவாக தேமுதிக கட்சியின் மாநில பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் ஈரோடு கிழக்கில் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது மக்களிடையே பேசிய பிரேமலதா விஜயகாந்த் திமுக மற்றும் அதிமுக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்கள் வயதானவர்கள். அவர்களால் நடக்க கூட முடியவில்லை.

ஆனால் நம்முடைய வேட்பாளர் மிகவும் சுறுசுறுப்பானவர். அவர் சுறுசுறுப்பாக மக்களை சந்தித்து வருவதால் அவருக்கு நல்ல பெயர் இருக்கிறது. திமுக அரசு இதுவரை எந்த ஒரு வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை. மாறாக மின்கட்டண உயர்வு, சொத்து வரி உயர்வு போன்ற பல்வேறு விலைவாசி உயர்வால் மக்கள் அவதிப்பட்டு தான் வருகிறார்கள். வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள இருவர் பட்டினியால் உயிரிழந்ததை கேட்டு விஜயகாந்த் கண்ணீர் விட்டு கதறி அழுதார். இந்த நிலை மாற வேண்டும் என்றால் ஒருவிரல் புரட்சி வரவேண்டும். எனவே நீங்கள் வாக்களிக்கும் போது ஒரு நிமிடம் சிந்தித்து நல்லவர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறினார்.