ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் 27ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் நிறைவு பெற்று, தேர்தலில் மொத்தம் 77 பேர் போட்டியிடுகின்றனர். இந்நிலையில் தேர்தலுக்காக பிரச்சாரம் மிக தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஈரோடு கிழக்கில் போட்டியிடும் நாதக வேட்பாளர் மேனகா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிப்.20ம் தேதி ஆலமாத்தெருவில் அனுமதியின்றி தேர்தல் விதியை மீறி பரப்புரை மேற்கொண்ட புகாரில், மேனகா உட்பட 30 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முறைகேடு செய்யும் திமுக, அதிமுகவினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல், ஒருதலைபட்சமாக வழக்குப்பதிவு செய்யப்பட்டதாக அக்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.