அதிமுகவில் இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் இடையே சமீப காலமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. கடந்த ஆண்டு ஒற்றை தலைமையில் தொடங்கிய சலசலப்பு ஓபிஎஸ்ஐ அதிமுகவிலிருந்து நீக்கியது வரை நீட்டித்துள்ளது. தற்போது அதிமுகவின் பொதுச் செயலாளராக இபிஎஸ் பதவியில் உள்ளார். இந்நிலையில் ஓபிஎஸ் மனமிறங்கி வந்து இபிஎஸ்ஐ பொதுச் செயலாளராக ஏற்று கடிதம் கொடுத்தால் அவரை சேர்த்துக் கொள்ள தயாராக உள்ளார். ஓபிஎஸ் வந்தாலும் வராவிட்டாலும் அதிமுக எழுச்சியுடன் தான் இருக்கிறது என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விளக்கம் அளித்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து நேர்காணலில் பேசிய செல்லூர் ராஜு, பாஜக தனித்துப் போட்டியிட்டால் அதிமுகவுக்கு கூடுதலாக தான் வாக்கு கிடைக்கும் என போட்டு உடைத்துள்ளார். பாஜகவுடன் தோழமையுடன் தான் இருக்கிறோம். எங்களுக்கு ஒரே எதிரி திமுக மட்டும் தான். மற்ற எந்த கட்சி வந்தாலும் கூட்டணிக்கு தயார் என்றார். சீமான் வந்தாலும் கூட்டணிக்கு சேர்ப்பிறா என நெறியாளர் கேட்க, அவரும் தோழமை கட்சி தான். கூட்டணி எல்லாம் தேர்தலின் போது தான் தெரியவரும் என தெரிவித்துள்ளார்.