தமிழகத்தில் சமீப காலமாக பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் என்பது அதிகரித்து வருகிறது. பாலியல் வன்முறை சம்பவங்களால் சிறுமிகளும் பாதிக்கப்படுகிறார்கள். பள்ளி மற்றும் கல்லூரிகளில் கூட சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுக்கப்படுகிறது. ஆசிரியர்களே இது போன்ற சம்பவங்களில் ஈடுபடுவது கூடுதல் வேதனையை தருகிறது. இந்நிலையில் நாளுக்கு நாள் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் என்பது தமிழ்நாட்டில் அதிகரித்து வருவதாக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வரும் நிலையில் தற்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜயும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் இன்று மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கு வாழ்த்து தெரிவித்தும் கேள்விக்குறியான பெண்களின் பாதுகாப்பு குறித்தும் பேசி வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது,
அனைவருக்கும் வணக்கம் இன்று சர்வதேச மகளிர் தினம். இதனால் தமிழக முழுவதும் இருக்கும் என்னுடைய அம்மா, அக்கா, தங்கை மற்றும் தோழி என உங்கள் அனைவருக்கும் இந்த தினத்தில் வாழ்த்து சொல்லாமல் இருக்க முடியாது. இது சந்தோஷம் தானே.எந்த பாதுகாப்பும் இல்லாத போது எப்படி சந்தோஷமாக இருக்க முடியும் என்று நீங்கள் நினைப்பது எனக்கு புரிகிறது. நீங்க நாங்க நாம எல்லோரும் சேர்ந்து தான் இந்த திமுக அரசை தேர்வு செய்தோம்.
அவர்கள் நம்மை ஏமாற்றி விட்டார்கள் என்பது இப்போதுதானே தெரிகிறது. ஆனால் மாற்றம் என்பது இருக்கிறதுதானே. எனவே 2026 ஆம் ஆண்டு தேர்தலில் நாம எல்லோரும் சேர்ந்து இந்த திமுக அரசை மாற்றுவோம். மகளிர் பாதுகாப்பை உறுதி செய்வோம் என்று இந்த தினத்தில் உறுதி ஏற்போம் என்று கூறியுள்ளார்.மேலும் திமுக பெயரை சொல்லாமலேயே நடிகர் விஜய் விமர்சனம் செய்வதாக சர்ச்சை எழுந்த நிலையில் இன்று திமுகவின் பெயரைச் சொல்லி பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என வீடியோ வெளியிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
— TVK Vijay (@TVKVijayHQ) March 8, 2025
