சென்னை மாமன்ற உறுப்பினர் நிரஞ்சனா ஜெகதீசன் திமுகவிலிருந்து தற்காலிகமாக நீக்கப்படுவதாக கட்சித் தலைமை அறிவித்துள்ளது. நிரஞ்சனாவின் கணவர் ஜெகதீசன் நள்ளிரவில் தனது கூட்டாளிகளுடன் இணைந்து காவலர்களை ஆபாசமாக திட்டி மிரட்டல் விடுத்த வீடியோ வைரலானது. அதேபோல் சாலையோர கடைக்காரர்கள், வீடு கட்டுபவர்களிடம் மிரட்டி பணம் பறிப்பது என அடுத்தடுத்து புகார் எழுந்த நிலையில், திமுக தலைமை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

07:56 AM, 10th Jan 2024