
சீனாவில் உள்ள தன்னாட்சி பெற்ற மாகாணமான திபெத் இமயமலையின் வடக்கு பகுதியில் ஒரு உயரமான இடத்தில் அமைந்துள்ள நிலையில் இங்கு நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. நேபாள எல்லையில் அமைந்துள்ள திபெத்தில் உள்ள ஷிகாட்சே நகரில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் ரிக்டர் அளவுகளில் 7.1 என்ற அளவில் பதிவானது.
இந்த விபத்தில் முதலில் 95 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியான நிலையில் தற்போது 126 பேர் பலியானதாக கூறப்பட்டுள்ளது. அதன்பிறகு 188 பேர் படுகாயம் அடைந்திட நிலையில் இடிபாடுகளில் இன்னும் சிலர் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. மேலும் அங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் நிலநடுக்கத்தினால் இடிந்து தரைமட்டமாக்கியுள்ளது.