
அமெரிக்காவின் புளோரிடா ஸ்டேட் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 18 அன்று திடீரென துப்பாக்கிச் சூடு நிகழ்ந்ததால் மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் பதற்றமடைந்தனர்.
வகுப்பறையில் இருந்த மாணவர்கள், தாக்குதல் நடத்தும் நபரின் கண்ணுக்குத் தெரியாமல் இருக்க சூயிங் கம் (chewing gum) பயன்படுத்தி ஜன்னல்களில் காகிதங்களை ஒட்டியுள்ளனர். “டேப் இல்லாததால் சூயிங் கம் உபயோகித்தோம்” என ஒரு மாணவர் தெரிவித்தார்.
இந்த அதிர்ச்சியான சூழ்நிலையில் 23 வயதான மாடிசன் அஸ்கின்ஸ் என்ற மாணவி, துப்பாக்கிச் சூடு நடந்த போது இறந்தது போல நடித்து உயிர் தப்பியுள்ளார்.
இந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர். 5 பேர் காயமடைந்தனர். தாக்குதல் நடத்தியவர் 20 வயதான பீனிக்ஸ் இக்னர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அவர் ஒரு போலீஸ் அதிகாரியின் மகன் என்பதும், தனது சின்னம்மாவிடம் இருந்த பழைய போலீஸ் துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்த தாக்குதலை நடத்தியதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம், அமெரிக்காவில் உள்ள கல்வி நிறுவனங்களில் பாதுகாப்பு மற்றும் ஆயுதக் கட்டுப்பாடு தொடர்பான சட்டங்களின் குறைபாடுகள் மீதான கவலைகளை மீண்டும் முன்வைத்து வருகிறது.