திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த புதூர் என்னும் பகுதியில் பிச்சமுத்து என்பவர் வசித்து வருகிறார். இவர் ஒரு கூலி தொழிலாளி. இந்நிலையில் சம்பவ நாளன்று பிச்சமுத்துக்கும்,  சாமிக்கண்ணு என்பவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து வாக்குவாதம் முற்றியதால் பின்பு அது கைகலப்பானது. இதனால் கோபமடைந்த அவர் ஒரு கட்டத்தில் அருகில் இருந்த கண்ணாடி பாட்டிலை உடைத்து சாமிக்கண்ணுவை குத்தியுள்ளார்.

இதில் அவருக்கு பலத்தகாயம் ஏற்பட்ட நிலையில் அருகிலுள்ளவர்கள் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அதன்பின் இந்த சம்பவம் தொடர்பாக காவல்நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. அந்த புகாரின்படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து பச்சமுத்துவை கைது செய்தனர். மேலும் அவரை கோர்ட்டில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.