தமிழகத் திரையுலகின் உச்ச நட்சத்திரமும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான விவாகரத்து வழக்கு, தற்போது ஒரு புதிய திருப்பத்தைச் சந்தித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 24-ம் தேதி சங்கீதா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், கடந்த நான்கு ஆண்டுகளாக இருவரும் ஒரே வீட்டில் வசித்தும் தனித்தனியாகவே வாழ்ந்து வருவதாகவும், சில தனிப்பட்ட காரணங்களால் ஏற்பட்ட மன உளைச்சலே இந்த முடிவுக்குக் காரணம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தச் சூழலில், கடந்த ஏப்ரல் 20-ம் தேதி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த இந்த வழக்கை விசாரித்த நீதிபதி சசிகலா, ஜூன் 15-ம் தேதி விஜய் மற்றும் சங்கீதா இருவரும் நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
இந்நிலையில், இந்த முக்கியத்துவம் வாய்ந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதி சசிகலா அதிரடியாகப் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, ஏற்கனவே செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றிய சுஜாதா மீண்டும் அதே பொறுப்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜூன் 15-ம் தேதி விஜய் மற்றும் சங்கீதா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக உள்ள நிலையில், நீதிபதி மாற்றப்பட்டிருப்பது இந்த வழக்கின் அடுத்தகட்ட நகர்வுகள் குறித்த எதிர்பார்ப்பை அரசியல் மற்றும் சினிமா வட்டாரங்களில் எகிற வைத்துள்ளது. புதிய நீதிபதி முன்னிலையில் ஜூன் மாதம் நடைபெற உள்ள விசாரணையில் என்ன நடக்கும் என்பதை அறிய ஒட்டுமொத்த தமிழகமும் ஆவலுடன் காத்திருக்கிறது.
