கர்நாடகாவில் சிங்கம் போல ஐபிஎஸ் அதிகாரியாகப் பணியாற்றி, பின்னர் மக்கள் சேவைக்காக 2019-ல் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜாகவில் இணைந்த அண்ணாமலை, 2021 முதல் 2025 வரை தமிழக பாஜகவின் மாநில தலைவராக அதிரடி ஆக்ஷன் காட்டி மாஸ் பண்ணினார்.
ஆனால், சமீபத்தில் தலைவர் பதவியில் இருந்து மாற்றப்பட்ட அண்ணாமலைக்குக் கட்சியில் வேறு எந்த முக்கியப் பொறுப்புகளும் வழங்கப்படாததால், அவர் கடும் அதிருப்தியில் இருந்து வந்ததாகக் கூறப்பட்ட நிலையில், இப்போ ஒட்டுமொத்த தாமரை வட்டாரத்தையும் அதிரவைக்கும் ஒரு பகீர் திருப்பம் அரங்கேறியுள்ளது.
திடீர் பயணமாக டெல்லி சென்றுள்ள அண்ணாமலை, இன்று பாஜக தேசிய தலைவர் நிதின் நபினை நேரில் சந்தித்து, கட்சியில் இருந்து விலகுவதற்கான தனது அதிகாரப்பூர்வ ராஜினாமா கடிதத்தை வழங்க உள்ளதாகத் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன!
அவருக்கு மத்திய அமைச்சரவையில் மந்திரி பதவி வழங்க கட்சித் தலைமை முன்வந்தும், அந்த ஆஃபரை அண்ணாமலை அதிரடியாக நிராகரித்துவிட்டாராம்.
பாஜகவில் இருந்து வெளியேறும் அவர், முதலில் ஒரு சமூக இயக்கத்தைத் தொடங்கி, பின்னர் அதை ஒரு புதிய அரசியல் கட்சியாக மாற்றத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் சிறகடிக்கின்றன. டெல்லி கிளம்பும் முன் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, “இன்னும் 2 நாட்களில் உங்களோட எல்லா கேள்விகளுக்கும் நச் என்று பதில் அளிக்கிறேன்” என சஸ்பென்ஸை எகிற விட்டுச் சென்றுள்ளார். அண்ணாமலையின் இந்த அதிரடி மூவ், தமிழக அரசியல் களத்தில் இப்போ ஒரு மெகா புயலைக் கிளப்பியுள்ளது.
