தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே இருப்பதால், வங்கிகளில் நகையை அடகு வைத்துக் கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை கிடுகிடுவென அதிகரித்துள்ளது. கடந்த 2024 ஏப்ரல் மாதம் 1.10 லட்சம் கோடியாக இருந்த நகைக் கடன், அதே ஆண்டு அக்டோபரில் 3.37 லட்சம் கோடியாக உயர்ந்திருக்கிறது. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால், கடன் வாங்குபவர்களில் 45 சதவீதம் பேர் 31 முதல் 40 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் தான்.

​தங்கத்தின் விலை திடீரென குறையும் போது, நகையின் மதிப்பை விட வாங்கிய கடன் தொகை அதிகமாக இருப்பதால், பலர் நகையைத் திருப்ப ஆர்வம் காட்டுவதில்லை. இதனால் வங்கிகளுக்கு நஷ்டம் ஏற்படும் அபாயம் உள்ளதால், ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன் விளைவாக, இதுவரை நகையின் மதிப்பில் 72% வரை கடன் கொடுத்து வந்த வங்கிகள், இனிமேல் 60 முதல் 65% வரை மட்டுமே கடன் வழங்க முடிவு செய்துள்ளன. இதனால் இனி நகை அடகு வைப்பவர்களுக்குக் கிடைக்கும் பணத்தின் அளவு குறைய வாய்ப்புள்ளது.