தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், தான் போட்டியிடும் பெரம்பூர் தொகுதியில் நேற்று மாலை திடீரென விசிட் அடித்து வாக்காளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார். அங்குள்ள கட்சியின் தேர்தல் பணிமனைக்குச் சென்ற விஜய், அங்கிருந்த பெண் நிர்வாகிகளுடன் இணைந்து ‘விசில்’ சின்னம் பொறித்த கோலத்தை வரைந்து உற்சாகப்படுத்தினார்.

விஜய் வந்திருப்பதை அறிந்ததும் அந்தப் பகுதி மக்கள் தங்கள் குடும்பத்தினருடன் அவரைப் பார்க்கக் குவிந்ததால், பெரம்பூர் பகுதியே விழாக் கோலம் பூண்டது. அதனைத் தொடர்ந்து, அந்தப் பகுதியில் உள்ள வீடுகளுக்கு நேரடியாகச் சென்ற விஜய், ஒவ்வொரு குடும்பத்தினரையும் நேரில் சந்தித்துப் பேசினார். அவருக்குப் பெண்கள் தண்ணீர் கொடுத்து உபசரிக்க, ஒரு மூதாட்டி விஜய்க்கு விபூதி பூசி வெற்றி பெற வாழ்த்தினார்.
<a href=”http://

“>

குழந்தைகளுடன் சிறிது நேரம் பேசி மகிழ்ந்த விஜய், வரும் தேர்தலில் மறக்காமல் ‘விசில்’ சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கேட்டுக்கொண்டார். விஜய் எளிமையாக வீடுகளுக்குச் சென்று வாக்கு சேகரித்த இந்த வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி வருகின்றன.