
உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ஹரோதி மாவட்டத்தில் ஒரு கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் நடந்த ஒரு கொலை தற்போது மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அந்த கிராமத்தில் 8 வயது சிறுமி ஒருவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். அப்போது மது போதையில் இருந்த ஒரு வாலிபர் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யும் நோக்கத்தில் நெருங்கியுள்ளார். இதனால் சிறுமி கத்தி கூச்சலிட்டார். இதனால் தான் மாட்டிக் கொள்வோம் என்ற அச்சத்தில் வாலிபர் சிறுமியை கழுத்தை நெரித்திக் கொன்றார். பின்னர் உடலை கரும்பு காட்டில் மறைத்து வைத்துள்ளார்.
இந்நிலையில் சிறுமி வீட்டிலிருந்தே திடீரென மாயமானதால் அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியுள்ளனர். அப்போது இலைகளால் மறைக்கப்பட்ட நிலையில் கரும்பு காட்டில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இது தொடர்பாக குழந்தையின் தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் படி சம்பந்தப்பட்ட இளைஞரை காவல்துறையினர் பிடித்து விசாரணை நடத்தியதில் மேற்கண்ட விவரங்கள் தெரிய வந்தது. மேலும் அந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ள நிலையில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.