அரியானா மாநிலம் கர்னால் பகுதியில் இரண்டு பேர் கூட்டு சேர்ந்து பெண்ணிடம் இருந்து செயினை பறிக்க திட்டமிட்டுள்ளனர். அப்போது அந்தப் பெண் செல்லும் இ-ரிக்ஷாவில் கொள்ளையர்களில் ஒருவர் ஏறியுள்ளார். அவருடைய கூட்டாளி அவர்களை பின்தொடர்ந்துள்ளார். அப்போது ரிக்ஷா கூட்டம் குறைந்த பகுதிக்கு வந்ததும் அதில் இருந்த நபர் இறங்கி கொள்கிறேன் என கூறியுள்ளார். ரிக்ஷா நின்றதும் கட்டணத் தொகையை கொடுப்பது போல கொடுத்து உடனே அந்த பெண்ணின் தங்கக் காதணி பறித்துக் கொண்டு ஓடுகிறார். இதற்கு முன்பு கூட்டாளியான மற்றொரு நபர் பைக்கில் தயாராக முன்னே சென்ற சாலையின் நடுவில் நின்று கொண்டிருந்தார்.

உடனே இருவரும் பைக்கில் தப்பிச் செல்ல தயாராக இருந்த நிலையில் எதிரே வந்த பேருந்து ஓட்டுனர் ஒருவர் இதனை கவனித்து விட்டார். அவர் விரைவாக வந்து அந்த பைக் மீது மோதினார். இதனால் அந்த நபர்கள் இருவரும் பைக்கில் இருந்து கீழே விழுந்த நிலையில் தப்பி செல்லும் கொள்ளையர்களை தடுக்கும் நோக்கில் அவர் பேருந்தால் மோதி இருக்கிறார். இருந்தாலும் பைக்கை விட்டுவிட்டு அவர்கள் விரைவாக எழுந்து ஓடி விட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் அந்த பைக்கை கைப்பற்றி சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து வருகிறார்கள். தற்போது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.