பீகாரின் அராரில் உள்ள சந்தேஷ் போலீஸ் நிலையம் பகுதியில் கஜி சவுக் கிராமத்தில் உள்ள பாலு காட் எனப்படும் ரெட்டி காட் பகுதியில் நேற்று முன்தினம் 4 முகமூடி கும்பல் 2 பேரை சுட்டனர். இந்த சம்பவத்தில் காயமடைந்த இருவரும் மணல் ஏற்றும் தொழிலாளர்கள். அவர்களில் ஒருவர் அஜிம் ஆபத் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பீம்புரா கிராமத்தைச் சேர்ந்த 20 வயதான சோனு குமார்.

மற்றொருவர் சந்தேஷ் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட சரையா கிராமத்தைச் சேர்ந்த 27 வயதான முகேஷ் குமார் குப்தா. இருவரும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.