இந்தியாவில் கொரோனா காலகட்டத்திற்கு பின் தங்கத்தின் விலை எதிர்பாராத அளவு உயர்ந்துள்ளது. அதன் பின் உக்ரைன் – ரஷ்யா இடையே ஆன போர் காரணமாக உலக பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்தது. இந்நிலையில் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் கச்சா எண்ணெய் போன்றவற்றின் விலை உயர்ந்துள்ளது. அந்த வகையில் தங்கத்தின் விலையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்த விலை உயர்வு முதலீடாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ஆனால் புதிய தங்கம் மற்றும்  தங்கத்தால் ஆன அணிகலன்களை வாங்க நினைத்தவர்கள் மத்தியில் பெரும் பொருளாதார ரீதியான சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த தங்கத்தின் விலை எப்போது குறையும் என எதிர்பார்த்து இருந்த நேரத்தில் கடந்த வாரம் திடீரென தங்கத்தின் விலை 1.47 சதவீதம் குறைந்துள்ளது. இந்நிலையில் தற்போது இந்த நிலை தொடருமா என பொதுமக்கள் மத்தியிலும், முதலீட்டாளர்கள் மத்தியிலும் கேள்வி எழுந்துள்ளது. தற்போது அமெரிக்க டாலரின் மதிப்பு மற்றும் தங்கத்தின் மீதான முதலீட்டை குறைக்க தொடங்கியுள்ளது. அதனால் தங்கத்தின் விலை குறைய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறியுள்ளனர்.