சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள நவாராய்ப்பூர் பகுதியில் அகில இந்திய காங்கிரஸ் காரிய கமிட்டியின் 85-வது மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாடு கடந்த 24-ஆம் தேதி தொடங்கிய நிலையில், நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் உயர்மட்ட தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற மாநாட்டில் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தொண்டர்களுக்கு முக்கிய அறிவுரைகளை வழங்கினார்.

அவர் கட்சி தொண்டர்களும், தலைவர்களும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்று கூறினார். அதன் பிறகு காங்கிரஸ் தொண்டர்களை மத்திய அரசு குறி வைக்கிறது. விவசாயிகள் பிரச்சனையில் காங்கிரஸ் கட்சி கவனம் செலுத்தும். காங்கிரஸ் கட்சியினர் வெறுப்பு அரசியலை விடுத்து அன்பான அரசியலை ஒற்றுமையுடன் செய்ய வேண்டும் என்று கூறினார்.