மத்திய பிரதேசம் மாநிலத்தில் இறந்த பெண்ணின் உடலை அடக்கம் செய்ய பணம் இல்லாமல் சாலையில் விட்டு சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 53 வயதான நபர் ஒருவர் தன்னுடன் 10 ஆண்டுகளாக வாழ்ந்து வந்த மனைவியின் உடலை சாலையில் அப்படியே விட்டு சென்றுள்ளார். இந்தூரை சேர்ந்த பெண் ஒருவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்த நிலையில் உடன் வசித்து வந்த கணவர் பணம் இல்லாமல் என்ன செய்வது என்று கலங்கியுள்ளார்.

மனைவியின் சடலத்தை மூன்று நாட்களாக அவர் வீட்டில் வைத்திருந்த நிலையில் அங்கிருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியது. இது குறித்து அக்கம் பக்கத்தினர் விசாரித்த போது நடந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இதனைத் தொடர்ந்து சடலத்தை சாலையோரம் கொண்டு போட்டு விட்டார். இறுதி சடங்கு செய்வதற்கு பணம் இல்லாத காரணத்தால் இவ்வாறு செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.