இந்தோனேசிய நாட்டில் கிழக்கு பகுதியில் பப்புவா என்ற பிராந்தியம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் நேற்று திடீரென நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.2 ஆக பதிவாகியுள்ளது. மேலும் இது ஜெயபுரா நகர் அமைந்துள்ள பகுதியின் தென்மேற்கில் கடலுக்கு அடியில் சுமார் 22 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த நிலநடுக்கத்தினால் கடற்கரை பகுதியை ஒட்டி அமைக்கப்பட்டு இருந்த ஹோட்டல் ஒன்று இடிந்து கடலுக்குள் விழுந்தது. இதில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர். அது மட்டுமில்லாமல் பல கட்டிடங்கள் சேதமடைந்துள்ளன. இதனை அடுத்து உடனடியாக மீட்பு குழுவினர் அப்பகுதிக்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.