பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஏப். 18) இரவு 8:30 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற உள்ளார். நேற்று நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான 33% இட ஒதுக்கீடு வழங்கும் 131-வது அரசியலமைப்பு திருத்த மசோதா தோல்வியடைந்த நிலையில், பிரதமரின் இந்த உரை மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.
2016-ல் இதே 8:30 மணிக்கு அவர் பணமதிப்பிழப்பு (Demonetization) அறிவிப்பை வெளியிட்டதை நினைவுபடுத்தும் விதமாக இருப்பதால், இப்போதும் ஏதேனும் அதிரடி அறிவிப்பு வருமா என்ற அச்சமும் எதிர்பார்ப்பும் மக்களிடையே தொற்றிக்கொண்டுள்ளது.
எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் மசோதா நிறைவேறாமல் போனது குறித்து பிரதமர் தனது வருத்தத்தைப் பதிவு செய்வார் என்றும், பெண்களின் நலனுக்கான அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விளக்குவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
🚨Prime Minister Narendra Modi will address the nation at 8:30 PM tonight
Both Bulls & bears right now 👇 pic.twitter.com/1rDiOZMkbq
— RedBoxxLocal India Parody (@REDBOXINDIIA) April 18, 2026
“>
பிரதமரின் இந்த திடீர் உரை குறித்த அறிவிப்பு வெளியான உடனே, சமூக வலைதளங்களில் மீம்கள் அனல் பறக்கத் தொடங்கிவிட்டன. “மித்ரோன்” (Mitron) என்ற வார்த்தையைக் கேட்டாலே இப்போது கலக்கமாக இருக்கிறது எனச் சிலர் நகைச்சுவையாகப் பதிவிட, “மீண்டும் ஊரடங்கா அல்லது புதிய பொருளாதார மாற்றமா?” எனப் பலரும் தங்களது யூகங்களை அள்ளி வீசி வருகின்றனர்.
குறிப்பாக, தொகுதி மறுவரையறை மற்றும் ஐபிஎல் தொடரின் 18-வது ஆண்டு விழா குறித்தும் சுவாரசியமான விவாதங்கள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளன. எது எப்படியிருந்தாலும், 2025 செப்டம்பர் மாதத்திற்குப் பிறகு பிரதமர் ஆற்றும் இந்த முக்கிய உரை, இந்தியாவின் அரசியல் களத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
