பிரசவம் என்பது ஒரு பெண்ணுக்கு மறுபிறவி என்றே சொல்லப்படும் நிலையிலே, ஒரு பெண் ஓடும் காரிலேயே தானாகவே ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்த சம்பவம் தற்போது உலகெங்கும் வைரலாகி வருகிறது. எந்த மருத்துவ உதவியும் இல்லாமல், எந்த பயத்திலும் அலறாமல், தனியாக தைரியமாக குழந்தையை பெற்றெடுத்த அந்த பெண்ணின் வீடியோ, மே 15 ஆம் தேதி நைஜா ஹரிசனா என்ற எக்ஸ் கணக்கில் பகிரப்பட்டது. வீடியோவில், அந்த பெண் தனது கணவருடன் பயணித்தபோது, திடீரென பிரசவ வலி ஏற்பட்டதும், அவள் அதற்கேற்ப துணிச்சலுடன் செயல்பட்ட காட்சி தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

https://x.com/TaraBull808/status/1856061542049165651?t=384hdqlpDx01ysLrE_YR7A&s=19

அந்த பெண், யாருடைய உதவியும் இல்லாமல் தானாகவே பிரசவம் பார்த்துள்ளார்.  ஓடும் காரில் திடீர்னெ வலி வர தானாகவே பிரசவித்துள்ள இந்த சம்பவம், மிகச் சிறப்பாகவும், அதிசயமாகவும் பார்க்கப்படுகிறது. வீடியோ 4.4 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளதுடன், பலரும் அந்த தாயின் தைரியத்தையும், மன உறுதியையும் புகழ்ந்துள்ளனர். ஒருவர், “இது ஒரு தாயின் சக்திக்கு எடுத்துக்காட்டாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த சம்பவம் கடந்த வருடம் நடைபெற்ற நிலையில் தற்போது மீண்டும் இந்த வீடியோ வைரல் ஆகிறது என்பதை குறிப்பிடத்தக்கதாகும்.