
அமெரிக்காவின் நியூயார்க்கில் மே 14ம் தேதி காலை 10.30 மணியளவில், செல்வாக்கு மிக்க எழுத்தாளரும், இன்ஸ்டாகிராம் பயனாளருமான கிந்த்ரா ஹால், அப்பர் ஈஸ்ட் சைடில் நடந்து சென்றபோது, எதிரே வந்த நபர் கிந்த்ரா தலையில் அடித்துள்ளார். இந்த சம்பவம் சாலையோர சிசிடிவியில் பதிவு செய்யப்பட்டது.
அந்த காட்சிகள் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி, மக்களில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கிந்த்ரா ஹால், தனது அனுபவத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தபோது, “நான் அந்த நபரை எதிர்பார்க்கவில்லை, அவர் திடீரென தாக்கினார்” என கூறினார்.
View this post on Instagram
சம்பவத்திற்குப் பிறகு கிந்த்ரா, தன்னை தாக்கிய நபரின் புகைப்படத்தை எடுத்துப் பிடிக்க முயன்றார். மேலும் அவர், “என்னைக் குத்திய நபர் என் வீட்டை நோக்கி பின்தொடர முயன்றார்” எனவும் தெரிவித்தார். ஆனால் NYPD அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வர சுமார் 30 நிமிடங்கள் பிடித்ததாக அவர் குற்றம்சாட்டினார். குற்றம் சாட்டப்பட்டவர் யாவ் ரீட் (43) என அடையாளம் காணப்பட்டு, பின்னர் போலீசாரால் கைது செய்யப்பட்டார்.