கோயம்புத்தூருக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து வரும் பயணிகள் ரயிலில் நேற்று மதியம் செல்வ லட்சுமி என்பவர் பயணம் செய்துள்ளார். இவரது 2 வயது மகன் தேவ் ஆதிரன் மிட்டாய் சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது தேவ் திடீரென அந்த மிட்டாயை விழுங்கியதாக தெரிகிறது.
இதனால் மிட்டாய் தொண்டையில் சிக்கி சிறுவனுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த செல்வலட்சுமி அருகில் இருந்த ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ்சாரை உதவிக்கு அழைத்தார்.
அதன்படி ரயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுனில் குமார், ஏஎஸ்ஐ சஜினி ஆகியோர் சிறுவனை தூக்கி குப்புற படுக்க வைத்து விடாமல் முதுகில் தட்டியுள்ளனர். இதனால் மிட்டாய் வெளியே வந்து விழுந்தது. விரைந்து செயல்பட்டு சிறுவனை காப்பாற்றிய போலீசாருக்கு பயணிகள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.
