ஈரோடு மாவட்டம் பவானி சேர்ந்தவர் நாகராஜ். இவரது மனைவி விஜயா. இந்த தம்பதியினருக்கு 16 வயதில் மகளும், 11 வயதில் மகனும் உள்ளனர். நாகராஜ் பவானி காவல் நிலைய குடியிருப்புக்கு எதிரே இருக்கும் பட்டறையில் வேலை பார்த்து வந்துள்ளார். நேற்று மதியம் வீட்டில் தனியாக இருந்த விஜயா தலையில் தாக்கி கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.

அவர் அணிந்திருந்த தங்க சங்கிலி துண்டு துண்டாக சிதறி கிடந்தது. அருகே கிரைண்டர் குழவி கல், மிளகாய் பொடி பொட்டலம், அரிவாள்மனை கிடந்தது. இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற விஜயாவின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விட்டிற்கு அருகில் பொருத்தப்பட்டு சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது நாகராஜுடன் வேலை பார்த்து வந்த மோகன் என்பவர் விஜயாவை கொலை செய்தது தெரியவந்தது.

அவரை பிடித்து விசாரித்த போது அதிர்ச்சி தகவல் தெரியவந்துள்ளது. விஜயாவுக்கும் மோகனுக்கும் இடையே திருமணத்தை மீறிய உறவு இருந்தது. சம்பவம் நடந்த அன்று மோகன் விஜயாவின் தலையில் கிரைண்டர் கல்லால் தாக்கிய கொலை செய்துள்ளார்.

பின்னர் தனது சட்டையில் படிந்த ரத்தத்தை தண்ணீரில் கழுவி சுத்தம் செய்துவிட்டு யாருக்கும் தெரியாமல் பட்டறைக்கு வேலைக்கு சென்றது தெரியவந்தது. அவர் விஜயாவை ஏன் கொலை செய்தார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.