வட இந்தியாவில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில், தாலி கட்டும் முக்கியமான நேரத்தில் குங்குமம்  கொண்டு வர மறந்ததால் ஏற்பட்ட பரபரப்பும், பின்னர் தொழில்நுட்ப உதவியுடன் அது சுமுகமாக முடிந்த சுவாரசியமான செய்தியும் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

மணமகன் ரிஷி மற்றும் மணமகள் பூஜா ஆகியோரின் திருமணச் சடங்குகள் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில், மணமகன் திடீரென கேமராவைப் பார்த்து, “திருமணச் சடங்கின் முக்கிய அங்கமான குங்குமத்தை கொண்டு வர மறந்துவிட்டோம்” என்று நகைச்சுவையுடன் ஒப்புக்கொண்டார்.
<a href=”http://

 

View this post on Instagram

 

A post shared by Vogueshaire Weddings (@vogueshaire)

“>
இதனால் மண்டபத்தில் சிறிய பதற்றம் ஏற்பட்டாலும், அங்கிருந்த இளைஞர்கள் சற்றும் தாமதிக்காமல் உடனடி டெலிவரி செயலியான ‘பிளிங்கிட்’ (Blinkit) மூலம் குங்குமத்தை ஆர்டர் செய்தனர். அடுத்த 16 நிமிடங்களில் டெலிவரி ஊழியர் திருமண மண்டபத்திற்கே வந்து குங்குமத்தை வழங்க, தடையின்றி சடங்குகள் இனிதே நிறைவேறின.

நவீன தொழில்நுட்பம் எவ்வாறு கலாசார சடங்குகளைக் காப்பாற்றியது என்பதைப் பாராட்டியுள்ள நெட்டிசன்கள், பிளிங்கிட் செயலி திருமணத் திட்டமிடுபவர்களைப் போலவே தற்போது இன்றியமையாததாக மாறிவிட்டதாகக் கருத்து தெரிவித்து வருகின்றனர்.