
தென்காசி மாவட்டம் வல்லம் பகுதியைச் சேர்ந்தவர் இசக்கி ராஜா. இவரது மனைவி திவ்யா. இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருந்துள்ளனர். திவ்யா தனது 2 குழந்தைகளுடன் கற்குடி கிராமத்தில் இருக்கும் தாய் வீட்டிற்கு வந்துள்ளார். இந்த நிலையில் விளையாடிக் கொண்டிருந்த 1 1/2 வயது குழந்தை விஷால் எதிர்பாராதவிதமாக தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்தது.
இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த திவ்யா தனது குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றார். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..