கல்லூரி ஒன்றில் மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியை முடித்துவிட்டு, அரசியல், பொருளாதாரம், கல்வி எனப் பல கேள்விகளுக்குப் பதிலளித்த உற்சாகத்துடன் கனிமொழி கருணாநிதி எம்.பி. வெளியே வந்தபோது, வாயிலில் நின்றிருந்த ஓரிரு இளைஞர்கள் “TVK… TVK…” எனச் சத்தமிட்டுள்ளனர். இந்தத் திடீர் கூச்சலைக் கண்டும் அமைதியாகப் பதற்றத்துடன் கடந்து செல்வார் என அந்தச் சிறுபிள்ளைகள் எண்ணியிருக்கலாம். ஆனால், அவர்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக, நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்கள் சட்டென்று நின்று, திரும்பிப் பார்த்திருக்கிறார். “முன்ன வா தம்பி… எதுக்கு TVK-ன்னு என்னைப் பார்த்து கத்தற?” எனக் கேட்டுவிட்டு, தன் வழக்கமான நளினமான நக்கலுடன், “முடிஞ்சா முன்னாடி வந்து காரணத்தைச் சொல்லிட்டு கத்துங்கடா” என்று மாஸ் பஞ்ச் கொடுத்துவிட்டு அங்கிருந்து நகர்ந்திருக்கிறார். ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், அரசியலில் ஆழமான புரிதலும், கேள்விகளுக்குத் தெளிவான விளக்கமும் அளிக்கும் பண்பும் கொண்ட ஒருவரை, சம்பந்தமே இல்லாமல் வழியில் கூச்சலிட்டுப் பம்மாத்துக் காட்ட முயன்ற இளைஞர்கள், இறுதியில் பதில் சொல்ல முடியாமல் பல்பு வாங்கிச் சென்றனர்.

இந்தச் சம்பவம், அரசியல் களத்தில் கண்ணியமான விவாதத்திற்கும், வெறுமனே சத்தமிடும் கோஷங்களுக்கும் இடையேயான அடிப்படை வித்தியாசத்தை உணர்த்துகிறது. அரங்கிற்கு உள்ளே சென்று, கட்சி சார்பாகவோ அல்லது நாட்டு நலன் கருதியோ ஆக்கபூர்வமான இரண்டு கேள்விகளைக் கூட கனிமொழி எம்.பி.யிடம் தார்மீக ரீதியில் கேட்டிருக்கலாம். ஆனால், அறிவார்ந்த தளத்தில் பேசுவதற்குப் பதிலாக, வழியில் நின்று கூச்சலிட்டுத் தங்களின் அறியாமையை வெளிப்படுத்தியுள்ளனர். இது, அடிப்படை அரசியல் புரிதல் இன்றி, தலைவர் முதல் கட்சி வரை தலைமறைவாக இருக்கும்போது, இப்படிச் சம்பந்தமே இல்லாமல் கூச்சலிட்டுத் தங்கள் இருப்பைக் காட்ட முயலும் சில ரசிகர்களின் பரிதாபகரமான நிலையை உணர்த்துகிறது. இதுபோன்ற தவிட்டுத் தற்குறிகள், தாய்லாந்து முதல் தமிழ்நாடு வரை எத்தனை செருப்படி வாங்கினாலும் திருந்தப் போவதில்லை போல. அறிவுபூர்வமான உரையாடலைத் தவிர்த்து, வெறுமனே கத்திக்கொண்டே இருப்பதுதான் இவர்களது முடிவான நிலைமை என்று தோன்றுகிறது.