
பெரம்பூரில் புளியந்தோப்பு கனகராஜ் தோட்டத்தைச் சேர்ந்தவர் ராமதாஸ் இவர் தனியார் நிறுவனத்தில் அலுவலக உதவியாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த சில மாதங்களாக ராமதாஸ் தனது தாய் சுகுணாவிடம் எனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் அப்படி இல்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என தனது தாயை மிரட்டி வந்தார்.
இதனால் கடந்த மாதம் 16-ஆம் தேதி ராமதாஸுக்கு செஞ்சி பகுதியைச் சேர்ந்த பிரியா என்பவரை திருமணம் செய்து வைத்தனர். இதனையடுத்து உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட பிரியா தனது மாமியார் சுகுணாவுடன் திண்டிவனத்தில் இருக்கும் ராமதாஸின் அண்ணன் ரமேஷ் வீட்டிற்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார்.
இதனால் வீட்டில் தனியாக இருந்த ராமதாஸ் அளவுக்கு அதிகமாக மது குடித்து விட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று ராமதாஸின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.