தென்னிந்திய சினிமா அளவில் முன்னணி நடிகையாக திகழும் அமலா பால் தான் கர்ப்பமாக இருப்பதாக அறிவித்துள்ளார். தமிழ் மற்றும் மலையாள திரைப்படங்களில் நடித்த பிரபலமான அமலாபால் இயக்குனர் ஏ எல் விஜயை காதலித்த திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் சில வருடங்களிலேயே இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து விட்டனர். இதனைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 26ஆம் தேதி தனது பிறந்தநாளில் காதலரை அறிமுகப்படுத்திய அமலா பால் அதனை தொடர்ந்து இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அமலா பால் தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை அறிவித்துள்ளார்.