அதிமுக திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலாளர் பதவியிலிருந்து தூசி மோகனை அதிரடியாக நீக்கி எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அவருக்குப் பதிலாக முன்னாள் அமைச்சர் முக்கூர் என். சுப்பிரமணியன் புதிய மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்ட அதிருப்தியில் இருந்த தூசி மோகன், இன்று காலை திடீரென விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்ததே இந்த அதிரடி மாற்றத்திற்குக் காரணம்.
தவெக-வில் இணைந்த சில மணி நேரங்களிலேயே, செய்யாறு தொகுதி வேட்பாளராகத் தூசி மோகனை விஜய் அறிவித்துள்ளார். அதிமுக-வின் ஒரு முக்கிய மாவட்டப் புள்ளியைத் தனது பக்கம் இழுத்து, உடனடியாகக் களமிறக்கியுள்ள விஜய்யின் இந்த ‘மாஸ்டர் பிளான்’ அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைப் பார்த்த நெட்டிசன்கள், “அதிமுக-வோட மெயின் பில்லரையே தவெக வேட்பாளரா மாத்திட்டாங்களே!” என சமூக வலைதளங்களில் கமெண்டுகளைத் தட்டி வருகின்றனர்.
