நடந்து முடிந்த தேர்தலில் தவெக-வின் அசுர வளர்ச்சி மற்றும் அவர்கள் கையாண்ட தேர்தல் வியூகங்கள் குறித்து திமுக மூத்த அமைச்சர் கே.என். நேரு வியப்புடன் பேசியுள்ளார். தேர்தலில் திமுகவினர் கொஞ்சம் அசால்ட்டாக இருந்துவிட்டதாக ஒப்புக்கொண்ட அவர், தவெக இவ்வளவு பெரிய வாக்குகளைப் பெறும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை என்றும், ஆரம்பத்தில் 10% முதல் 15% வரை இருந்த தவெக-வின் வாக்கு வங்கி, கடைசி நாட்களில் 30% முதல் 35% வரை உயர்ந்து திமுக-வுக்குச் சரிசமமாக வந்துவிட்டதாகக் கூறியுள்ளார்.
விஜய்யின் இந்த அதிரடி வெற்றிக்கு பின்னால் இருந்த சோசியல் மீடியா தந்திரத்தையும் நேரு போட்டுடைத்துள்ளார். தவெகவினர் ‘Instagram’ தளத்தை வைத்து ‘கூட்டு’ என்ற ஒரு பலமான வியூகத்தின் மூலமாக, நேரடியாக குடும்பங்களுக்குள் செய்திகளைக் கொண்டு சேர்த்து மொத்த வாக்குகளையும் அள்ளியுள்ளனர். திமுக அவர்களைப் பற்றிக் கவலைப்படாமல் இருந்த நேரத்தில், இடைவெளியில் அவர்கள் அசுர வளர்ச்சி பெற்று வெற்றியைப் பறித்துச் சென்றுவிட்டதாக நேரு ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
