தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று தமிழக பா.ஜ.க. முன்னாள் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அவர், இந்தக் கூட்டணியில் இணைந்து போட்டியிடுபவர்கள் அனைவரும் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
குறிப்பாக நடிகர் விஜய்க்கு அறிவுரை வழங்கிய அவர், அரசியலில் தனியாகப் போட்டியிடுவதை விட, மற்றவர்களுடன் இணைந்து நின்றால் வெற்றி இன்னும் எளிதாக இருக்கும் என்று குறிப்பிட்டார்.
இந்த கருத்து விஜய்க்கும் பொருந்தும் என்றும், அனைவரும் ஒற்றுமையாகச் செயல்படுவதே சிறந்தது என்றும் அவர் வலியுறுத்திக் கூறியுள்ளார்.
