தமிழக அரசியலில் “ஆயுள் கால அதிமுக விசுவாசி” என்று அறியப்பட்ட கே.ஏ. செங்கோட்டையன், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில்  இணைந்துள்ள நிலையிலும், தனது சட்டைப் பையில் இருக்கும் புகைப்படம் மூலம் மீண்டும் ஒரு விவாதத்தைக் கிளப்பியுள்ளார்.

கடந்த பிப்ரவரி 23-ஆம் தேதி வேலூரில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் கூட்டத்தில், முதல்முறையாகத் தனது சட்டைப் பையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் படத்திற்குப் பதிலாகத் தவெக தலைவர் விஜய்யின் புகைப்படத்தை வைத்திருந்தது தொண்டர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

“ஜெயலலிதா அவுட்.. விஜய் இன்” என்று அரசியல் விமர்சகர்கள் இதைக் குறிப்பிட்டு வந்தனர். ஆனால், நேற்றைய தினம் கோபியில் நடைபெற்ற மூத்த தலைவர் நல்லகண்ணு மறைவு குறித்த நிகழ்வில் பங்கேற்ற செங்கோட்டையன், மீண்டும் தனது சட்டைப் பையில் பழையபடி ஜெயலலிதாவின் புகைப்படத்தையே வைத்திருந்தார்.

இந்தத் திடீர் மாற்றம், அவர் மீண்டும் அதிமுக-விற்குத் திரும்பும் முடிவில் இருக்கிறாரா அல்லது விஜய்யின் புகைப்படத்தை ஒரு நிகழ்வுக்காக மட்டும் பயன்படுத்தினாரா என்ற கேள்வியைச் சமூக வலைதளங்களில் எழுப்பியுள்ளது.