
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு வருகிற 27ஆம் தேதி விக்கிரவாண்டியில் உள்ள விசாலை என்ற இடத்தில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டுக்கு காவல்துறையினர் 33 நிபந்தனைகள் விதித்த நிலையில் அது 22-ஐ கட்டாயமாக கடைபிடிக்க வேண்டும் என்று அறிவித்தனர். கடந்த 4-ம் தேதி பந்தல்கால் நடும் விழா நடைபெற்ற நிலையில் சுமார் 85 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் மாநாட்டுக்கான பந்தல்கால் நடும் பணிகள் நடைபெற்று வருகிறது.
அதே சமயத்தில் தற்போது மழை பெய்து வருவதால் மாநாடு நடைபெறும் இடம் சேரும் சகதியுமாக காணப்படுகிறது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் மழை பெய்து கொண்டிருப்பதால் தற்போது மீண்டும் தமிழக வெற்றி கழகத்திற்கு 5 கேள்விகள் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இந்நிலையில் நடிகர் விஜய் முன்னதாக தமிழக முழுவதும் உள்ள 234 தொகுதிகளிலும் மாநாடு நடைபெறுவதை முன்னிட்டு ஒருங்கிணைப்பாளர்களின் நியமித்து உத்தரவிட்டிருந்தார்.
இதைத்தொடர்ந்து தற்போது மாநாட்டு பணிகளுக்கான வரவேற்பு குழு, போக்குவரத்து குழு, வாகன குழு மற்றும் உணவு போன்றவைகளை கவனிப்பதற்காக 27 சிறப்பு குழுக்களை விஜய் நியமித்துள்ளார். அதுபோக கூடுதலாக 3 குழுக்களையும் நியமித்துள்ளார். அதன்படி மாநாட்டின் பணிகளை கவனிக்க தொழில்நுட்ப பணிகள் மற்றும் பாதுகாப்பு பணிகளை ஒருங்கிணைக்கும் குழு, தன்னார்வலர்கள் ஒருங்கிணைப்பு குழு மற்றும் காணொளி கண்காட்சி அமைப்புகள் என 3 குழுக்கள் நிறுவப்பட்டுள்ளது.
இந்த குழுக்களின் தலைமை நிர்வாகிகள் முழு பணிகளையும் முன் நின்று கவனிப்பார்கள். அதோடு சீருடை அணிந்த 10,000 தன்னார்வலர்கள் ஒருங்கிணைப்பு குழு மாநாட்டுக்கு வரும் பொது மக்களுக்கு முன்னின்று உதவிகளை செய்வார்கள். மேலும் இது தொடர்பான அறிக்கையை தமிழக வெற்றி கழகத்தினர் வெளியிட்டுள்ளனர்.
மாநாட்டுச் சிறப்புக் குழுக்கள்#தவெக_மாநாடு#TVKVijay@tvkvijayhq @BussyAnand pic.twitter.com/09GzC86B0j
— TVK Party Updates (@TVKHQUpdates) October 14, 2024